'நாங்க 'தன் பாலின உறவு' வச்சிகிட்டோம்'...'இஸ்ரோ விஞ்ஞானி' கொலையில்'...அதிரவைக்கும் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 05, 2019 11:21 AM

இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொலையில் சிக்கியுள்ள ஆய்வக உதவியாளர் அளித்துள்ள வாக்குமூலம் பலரையும் அதிரச் செய்துள்ளது.

Male Lab Technician Killed ISRO Scientist Over Money Row After Sex

கேரளாவை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் ஐதராபாத்தில் உள்ள தேசிய தொலை நிலை அமைப்பில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வங்கி ஊழியரான இவரது மனைவி சென்னையில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை அவர் வேலைக்கு வராத நிலையில் அவருடன் பணிபுரியும் அவரது நண்பர்கள் அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டார்கள். ஆனால் அவரது மொபைல் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது. இதனால் அவரது மனைவியை தொடர்பு கொண்ட அவர்கள் விவரத்தை கூறினார்கள்.

இதையடுத்து   ஐதராபாத் விரைந்த அவரது மனைவி, காவல்துறையினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்கள். அப்போது வீட்டில் உள்ள அறையில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையின் பின்பகுதியில் 3 இடங்களில் காயங்கள் இருந்தது. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியை கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொலையில் ஆய்வக உதவியாளர் ஸ்ரீனிவாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் ''தான் காசுக்காக சுரேஷ்யுடன் தான் பாலின உறவில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர் பணம் தராமல் ஏமாற்றியதாக கூறியுள்ளார்.

இதனால் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரத்தில் அவரை கொன்றதாக'' ஸ்ரீனிவாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி கொலையில் கொலையாளி அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KILLED #MURDER #LAB TECHNICIAN #ISRO #SCIENTIST #NATIONAL REMOTE SENSING CENTRE #NRSC #HYDERABAD #SEX