'அண்ணா..'.. 'தம்பீ...'.. 'பாத்து ஒரு வருஷம் ஆச்சுல்ல?'.. 'பார்ப்பவர்கள் வியக்கும் குரங்குகளின் பாசமழை!'.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Dec 23, 2019 11:46 AM

ஒரு வருடத்துக்கு மேலாக பார்த்துக்கொள்ளாத இரு பபூன் வகை கருங்குரங்குகள், சந்தித்துக் கொண்ட தருணத்தில் ஆரத்தழுவிக் கொண்ட காட்சி இணையத்தில் வீடியோவாக வலம் வந்து பலரையும் கவர்ந்துள்ளது.

Brothers uniting after a year, monkeys Sentiment video

அண்ணன், தம்பியான 2 குரங்குகள், வெவ்வேறு வனச்சரகங்களில் ஒரு வருடமாக தனித்தனியே பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில்தான், இந்த இரண்டு குரங்குகளும் சந்திக்க வைக்கப்பட்டன. திரைப்படங்களின் இறுதிக் காட்சிகளில் வருவதுபோல, இரண்டு குரங்குகளும் ஒன்றையொன்று பார்த்ததுமே பாசத்தில் பாய்ந்து

கட்டித் தழுவி அன்பை பொழியும் இந்த அற்புதமான காட்சியை, வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ பற்றி கமெண்டுகளை பதிவிட்டுள்ள பலரும், குரங்குகளின் இந்த நுட்பமான செயலைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளதோடு, அவற்றின் பாசத்தை பாராட்டியும் உள்ளனர். மனிதனின் மூல உயிரியாக கருதப்படும் குரங்கில் இருந்து தோன்றிய மனிதன், உறவுகளிடம் எப்படி அன்புடன் இருக்க வேண்டும் என்பதையும் இந்த குரங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Tags : #MONKEYS