'கரண்ட் பில் கட்ட நேர்ல வராதீங்க...' 'போன மாச பில்லுல டிஃபரன்ஸ் இருக்குன்னா....' கொரோனா வைரஸ் பரவுவதால் மின்சார வாரியம் தீடீர் அறிவிப்பு.
முகப்பு > செய்திகள் > தமிழகம்பணம் செலுத்த மின்கட்டண கவுன்டர்களுக்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மின்வாரியத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் மாநில அரசு பொது மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் காரணமாக இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மார்ச் மாதத்திற்கான மீட்டர் ரீடிங் எடுக்க முடியவில்லை என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்குண்டான மின்கட்டணத்தில் வேறுபாடு இருந்தால் அதற்கு அடுத்த மாத மின் கணக்கீட்டு கட்டணத்தில் சரிக்கட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மின்கட்டணம் செலுத்துவதற்கு பயனீட்டாளர்கள் மின்கட்டண கவுன்டர்களுக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மின்வாரிய துறை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழக அரசின் டான்ஜெட்கோ, இணையதளங்கள் மூலமும், ஆன்லைன் பேங்கிங், பேமண்ட் கேட்வே, உள்ளிட்டவற்றின் மூலமும் தங்கள் மின்கட்டண தொகையினை கட்ட வலியுறுத்தி உள்ளது.
