“இத செஞ்சா அவங்களுக்கு பேருதவியா இருக்கும்!”.. கொரோனா குறித்து ரஜினியின் முதல் ட்வீட்!.. நெகிழ வைக்கும் வேண்டுகோள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டியுள்ள ரஜினிகாந்த், ஒரு தாழ்மையான வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் நிகழ்ந்துவரும் சூழலில், ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக் கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத் தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ட்வீட்டில், “இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால்,
— Rajinikanth (@rajinikanth) March 19, 2020
அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” என்றும் ரஜினி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags : #RAJINIKANTH #CORONAVIRUSININDIA #CORONAALERT
