"ரூமை திறக்கும்போது ஒரே புகையா இருந்துச்சு"..லிவிங் டுகெதர் தம்பதி எடுத்த விபரித முடிவு.. சென்னையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கடந்த சில வருடங்களாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படும் தம்பதி தீக்குளித்து மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான சந்தீப் ஜெயின் (40) சவுகார் பேட்டையில் ஜவுளிக்கடை ஒன்றினை நடத்திவருகிறார். ஏற்கனவே இவருக்கு திருமணம் நடைபெற்று இருந்தாலும் தற்போது தனது மனைவியைப் பிரிந்து சந்தீப் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
லிவிங் டுகெதர்
இந்நிலையில் சந்தீப் ஜெயின் சென்னையில் உள்ள பெரிய மேடு பகுதியில் உள்ள சூலை ஹைரோட்டில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 35 வயதுடைய இலைச்சி என்ற பெண்ணுடன் தங்கி இருந்திருக்கிறார்.
சந்தீப் - இலைச்சி தம்பதி திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் ஒரே வீட்டில் கடந்த 3-4 ஆண்டுகளாக வசித்து வந்ததாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
புகை
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம், தனது கீழ் வீட்டில் வசித்துவரும் இளைஞருக்கு சந்தீப் போன்கால் செய்திருக்கிறார். உடனடியாக தனது வீட்டை திறக்கும்படி சந்தீப் கூறியதாக சொல்கிறார் அந்த இளைஞர்.
இதனையடுத்து உடனடியாக சந்தீப் வீட்டின் கதவை திறக்க முயற்சித்திருக்கிறார் அந்த இளைஞர். வெளியே கேட் பூட்டப்பட்டு இருந்ததால் இளைஞரால் கதவை திறக்க முடியாமல் போயிருக்கிறது. அக்கம் பக்கத்தினரை உடனே உதவிக்கு இளைஞர் அழைக்க, ஒரு வழியாக கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்து.
பாதி எரிந்த நிலையில் இருந்த சந்தீப், அந்த இளைஞரிடம் வந்து பேசியிருக்கிறார். இதனால் ஷாக்கான இளைஞர், அவர்களது போன் மூலமாக தம்பதியின் உறவினர்களை தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார். பின்னர், போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்திருக்கிறார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்திலேயே இலைச்சி மரணம் அடைந்ததாகவும் கடுமையான தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தீப் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
விபரீத முடிவு
இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞர் பேசுகையில்," அவர்கள் லிவிங் டுகெதர்-ல் இருப்பதே லாக் டவுன் போதுதான் எங்களுக்குத் தெரியும். பொதுவாக இருவரும் எங்களிடம் அதிகமாக பேசுவது கிடையாது. அடிக்கடி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். சம்பவம் நடந்த அன்று அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெற இருந்தது. அதுதான் இந்த விபரீத முடிவிற்கு காரணமா? எனத் தெரியவில்லை" என்றார்.
லிவிங் டுகெதர்-ல் இருந்த தம்பதி தீக்குளித்து மரணமடைந்திருப்பது சென்னையையே உலுக்கியுள்ளது.