"இதுனால தான் சென்னை BJP ஆபிஸ்ல பெட்ரோல் குண்டு போட்டேன்" .. குற்றவாளி சொன்ன பகீர் காரணம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தி.நகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை இந்த அலுவலகத்திற்குள் வீசிவிட்டு தப்பியுள்ளனர்.

நாசாவின் அடுத்த பிரம்மாண்ட திட்டம்.. விண்வெளி வீரர்களுக்கு வித்தியாச பயிற்சி.. - வைரல் புகைப்படம்..!
நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் ஆய்வு
இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேரமா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததன் பலனாக வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை. நீட் தேர்வுக்கு ஆதவராக பாஜக செயல்படுவதை எதிர்க்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கைதான வினோத் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் குண்டு வீசப்பட்டதை அடுத்து, தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கவேண்டும் என பாஜக மாநில அலுவலக செயலாளரான சந்திரன், தி. நகர் காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழக பாஜக கட்டிடம் மற்றும் உறுப்பினர்களை சேதப்படுத்தும் நோக்கத்தோடு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டும் இதே போல தாக்குதல் நடைபெற்றதாக குறிப்பிட்டிருந்த சந்திரன், இந்த தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யும்படியும் தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் உயர் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
