சென்னையில் LUXURY ஆக வாழ ரூ.15 ஆயிரம் போதும்.. அசர வைக்கும் பட்ஜெட்
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்சென்னையில் வசிப்பதற்கு "இந்த பணமே போதுங்க, செம்மையா வாழலாம்" என சென்னை பெண்ணின் "ஸ்மார்ட் பேச்சு" பலரையும் கவர்ந்துள்ளது.

சென்னை என்றாலே மெட்ரோ சிட்டி இங்கு வசிப்பதற்கு குறைந்தபட்சம் 40 ஆயிரத்திலிருந்து அதற்குமேல் இருந்தால், இங்கு ஓரளவு சொகுசு வாழ்க்கை வாழலாம் என பலரது மனதில் பல அபிப்பிராயங்கள் சென்னை குறித்து ஏற்படுவதுண்டு.
குறைந்தபட்ச பணம் கட்டுபடியாகாது
அங்கு பொருட்களின் விலையும், மால், தியேட்டர் போன்ற பல பொழுதுபோக்கு அரங்கங்கள் இருப்பதால், அதற்கு ஏற்றது போல் இருக்க வேண்டுமானால் குறைந்தபட்ச பணம் கட்டுபடியாகாது என்ற கோணத்தில் பலர் நினைப்பதுண்டு.
ஆனால், சென்னையில் வசிக்கும் பெண் ஒருவர் "15000 போதுங்க சென்னையில் செம்மையா வாழலாம்" என கூறுகிறார். "20,000 இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே சொகுசு வாழ்க்கை வாழலாம்" என அப்பெண் கூறியிருப்பது, ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் பின்னர் அப்பெண் கொடுத்த விளக்கம் ஏறத்தாழ சரியாகவே இருந்தது எனலாம்.
"15000 போதுங்க, செம்மையா வாழலாம்"
ஆமாங்க, உண்மையா தான். "15000 வீட்டு செலவிக்கும், பிள்ளைக படிப்புக்கும் போதுமானதுதான்". ஆனால், ஐடியில் பணிபுரிபவர்களுக்கு இந்த சம்பளம் கட்டுப்படி ஆகவில்லை என்று கூறுகிறார்கள். "அவங்க சொல்றது சரிதான், நாங்க எங்க வீட்டில ஏதாவது ஒரு விசேஷம்னா துணி எடுக்க மாட்டோம் பொங்கல், தீபாவளி இந்த மாதிரி திருவிழா டைம்ல தான் புது டிரஸ்லாம் எடுப்போம்.
அந்த டிரஸா தான் ஏதாவது ஒரு விசேஷம்னு வந்தா போட்டுக்குவோம். ஆனா, இங்கே நிறைய பேரு அடிக்கடி 10 டிரஸ், 20 டிரஸ்னு வாங்குறாங்க, இந்த மாதிரி வாங்குறப்போ அவங்களுக்கு கட்டுபடியாகாது. அது மாதிரி நாங்க வாரத்தில் ஒருவாட்டி தான் கறி சமைப்போம், ஆனா, இப்போ இவங்க எல்லாம் வீக்லி ஒன்ஸ் அவுட்டிங், டின்னருனு அடிக்கடி வெளியில சாப்பிட்டுறாங்க, அப்படி இருக்கப்ப அவங்களுக்கு இந்த பணம் பத்தாது. எனக்கு 15000 ஏன் போதும்னு சொன்னேனா வீட்டுச்செலவு, பிள்ளைக படிப்பு, அதுமட்டுமில்லாமல் எப்பயாவது பிள்ளைகளுக்கு சாப்பிடணும்னு தோணுச்சுன்னா வெளியில் இருந்து நாங்கள் வாங்கிட்டு போறது தான் ஸ்னாக்ஸ், மத்தபடி எந்த ஒரு ஆடம்பரமும் இருக்காது.
20000 இருந்தா என்ன பண்ணுவீங்க?
15 ஆயிரத்துக்குள்ள தான் செலவு பண்ணனும் அப்படின்னா, அந்த காசுக்குள்ள தான் செலவு பண்ணுவோம் என்று கூற, அப்போ 20000 இருந்தா என்ன பண்ணுவீங்க என்ற கேள்விக்கும், "அது இருந்தால் என்ன பண்ணுவோம் வீட்டு செலவுக்கு பத்தாயிரம் வரும், மிச்சம் பத்தாயிரத்துக்கு பிள்ளைகளுக்கு தேவையானது, படிப்பு இதுதான் கொடுப்போம் என அப்பெண் புன்னகை தவழ கூறுகிறார். இவரின் இந்த பேச்சால் 15,000 இருந்தா போதுமா சென்னையில சொகுசு வாழ்க்கை வாழலாம் போலயே என்ற ஐடியா தோன்றுகிறது.

மற்ற செய்திகள்
