காதல் ரசம் சொட்ட பேசியது அமைச்சரா? ஆசையோடு பேசி 73லட்சத்தை இழந்த பெண்.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய நவீன காலத்தில் ஆன்லைன் மோசடி அதிகமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலானோர் டெபிட் கார்டின் நம்பர், பின் நம்பர் கேட்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி போன் வந்திருக்கும். விவரமானவர்கள் தப்பியிருப்போம். அந்த விவரம் இல்லாதவர்களில் பலர் பல ஆயிரங்களையும் சிலர் சில லட்சங்களையும் கூட இழந்திருப்பார்கள். அந்த வகையில், பெண் ஒருவரை லத்வியா நாட்டின் அமைச்சர் படத்தை பயன்படுத்தி ஒருவர் ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த ஷெரான் புல்மர் என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தனது கணவனை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், முகநூல் மூலம் இவருக்கு ஆண் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவர் அமெரிக்கா ராணுவ வீரர் என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். மேலும், அந்த நபர் தனது முகநூல் கணக்கில் லத்வியா நாட்டின் அமைச்சர் மெர்ஃபியின் படத்தை வைத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பயன்படுத்தி அந்த நபர் இப்பெண்ணிடம் பேசி வந்துள்ளார். அவர் சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளில் இருப்பதாகவும், அவருடைய மனைவி இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு தனிமை மிகவும் வெறுமையாக உள்ளதாகவும் பேச ஒரு நபர் வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, நாளடைவில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துள்ளது. பின்பு ஒரு நாள், அந்த நபர்
ஷெரானிடம் தான் சிரியாவில் இருந்து வெளியே வர மற்றும் அங்கு அவருக்கு ஏற்பட்ட மருத்துவமனை செலவிற்கு பணம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, ஷெரான் அவருக்கு சுமார் 87000 பிரிட்டிஷ் பவுண்ட் அனுப்பியுள்ளார். மேலும், பிட்காயின் மூலமாக அவர் அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 87 லட்சம் ரூபாய் ஆகும். பணம் அனுப்பிய நாளில் இருந்து அந்த நபரிடம் இருந்து ஷெரானுக்கு எந்த அழைப்பும வரவில்லை. பின்புதான் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பொண் காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு இந்த விவகாரம் தொடர்பான உண்மை தெரியவந்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக்கில் லத்வியா நாட்டின் அமைச்சர் படத்தை பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட போலி கணக்குள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் சில கணக்குகள் பலரிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்து மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.