'அந்த' புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் 4 பேஜ்கள்.. இன்பார்மர் கொடுத்த இன்பர்மேசன்.. தட்டி தூக்கிய சென்னை போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை : சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பக்கங்கள் உருவாக்கி, தவறான தொழில் செய்து வந்தது பற்றி, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சென்னையின் நாவலூர் பகுதியை அடுத்த தாழம்பூர் என்னும் இடத்தில் வசித்து வருபவர் ரஞ்சித். 33 வயதாகும் இவரது பெயரில், போலீசாருக்கு புகார் ஒன்று கிடைத்துள்ளது.
சென்னையில், பல இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ரஞ்சித் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் தொழில்
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம், அதிகம் பாலியல் ரீதியிலான பக்கங்களைத் தொடங்கியுள்ள ரஞ்சித், அதில் பல தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு, இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள் என்று கூறி, வாடிக்கையாளர்களை வர வைத்து, பாலியல் தொழில் நடத்தியும் வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், பல பெண்களின் எண்ணை பகிர்ந்து, இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் ஆக்ஷன்
மேலும், ரஞ்சித் கட்டுப்பாட்டில் சில பெண்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், சென்னையிலுள்ள சில ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் அபார்ட்மெண்டுகளை வாடகைக்கு எடுத்தும் ரஞ்சித் செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது. சமூக வலைத்தளம் மூலம், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததையடுத்து, ரஞ்சித் மீதான புகார் குறித்து, தனி டீம் ஒன்று போலீஸ் டிபார்ட்மெண்டில் அமைக்கப்பட்டது.
நோட்டமிட்ட போலீஸ்
கூடுதல் கமிஷனர், மத்திய கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். ரஞ்சித் கையாண்டு வந்த பேஸ்புக் பக்கங்கள் மற்றும் அவர் வாடகைக்கு எடுத்து வந்த ஹோட்டலையும் கடந்த சில நாட்களாக, போலீசார் நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், ரஞ்சித் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தும் தகவல், கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சி தகவல்கள்
ரஞ்சித்தை தீவிரமாக தேடி வந்த போலீசார், அவரை தாழம்பூர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். சிவகுமார், பிரதீப் ராஜ், ஜோஸ் ராய் உள்ளிட்ட பல போலி பெயர்களில், பேஸ்புக் பக்கங்கள் தொடங்கி, பெண்களை வைத்து தொழில் நடத்தி வந்திருக்கிறார். அது மட்டுமில்லாமல், ரஞ்சித் குறித்து மேலும் சில அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.
ஊர் சுற்றிய ரஞ்சித்
பங்களா ஒன்றில் வசித்து வரும் ரஞ்சித்தின் வங்கி கணக்கில், லட்சக்கணக்கில் பணமும் இருந்துள்ளது. மேலும், பல மாநிலங்களுக்கு ஜாலியாக சுற்றுலா சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கான பணம் அனைத்தும் பாலியல் தொழில் நடத்தி ரஞ்சித் சம்பாதித்தது தான். சென்னையில் தி. நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், பாலியல் தொழிலை நடத்தி வந்த ரஞ்சித், இதற்கு முன்பு வெவ்வேறு பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தி, போலீஸ் நெருக்கடியால், அதனை தற்காலிகமாக விடவும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
3 ஆண்டுகளாக தேடிய போலீஸ்
கடந்த 3 ஆண்டுகளாக, ரஞ்சித்தை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், இப்போது தான் போலீசார் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர். மேலும், இவரின் கஸ்டடியில் இருந்த பெண்கள் பலர் மீட்கப்பட்டு, மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னையில், இளைஞர் ஒருவர், சமூக வலைத்தளம் மூலம், பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.