Kadaisi Vivasayi Others

கால் டாக்ஸி ஓட்டுநர் கொலையில் திடீர் திருப்பம்.. சிக்கிய கணவன் - மனைவி.. பரபரப்பு வாக்குமூலம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pandidurai T | Feb 12, 2022 10:10 AM

கோவை: மர்மமான முறையில் கால் டாக்ஸி ஓட்டுனர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Confession of husband and wife during police investigation

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள ஓணாப்பாளையம் பகுதியில் கடந்த 9ஆம் தேதி தனியார் தங்கும் விடுதி அருகில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காருக்கு பின்னால் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வடவள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வடவள்ளி காவல் துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

இதைதொடர்ந்து இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில், உயிரிழந்த நபர் வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சானு (31) என்பதும், ரெட் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதனிடையே அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதகாவும், சானு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறி அவரது உடலை உறவினர்கள் மற்றும் சக டாக்சி ஓட்டுநர்கள் வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

Confession of husband and wife during police investigation

போலீசார் விசாரணை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர், அவரது உடல் உறவினர்கள் பெற்றுகொண்டனர். பின்னர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 8ம் தேதி சென்னையை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அந்த டாக்ஸியில் பயணித்தது தெரியவந்தது.

கணவன் - மனைவி சிக்கியது எப்படி?

ஸ்டீபனிடம் நடத்திய விசாரணையில், பணத்திற்காக ஸ்டீபனும் அவரது மனைவி அமலோற்பவமும் சேர்ந்து ஓட்டுநரை கட்டையால் தலையில் அடித்தும், விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.  இதனையடுத்து காவல் துறையினர் ஸ்டீபன் மற்றும் அமலோற்பவம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொலை செய்து கொள்ளையடித்த 6100 ரூபாய் பணம், கொலை செய்ய பயன்படுத்திய மரத்தடி, 20 செல்போன்கள், ஒரு மடிக்கணினி, ஒரு டேப் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Confession of husband and wife during police investigation

விசாரணையில் பகீர் சம்பவம்

கைது செய்யப்பட்ட தம்பதி மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளும், ஸ்டீபன் மீது மேலும் இரண்டு கொலை வழக்குகளும், ஒரு ஆயுத வழக்கும் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.  அந்த கொலை வழக்கில் இதேபோல உடலில் விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : #COIMBATORE #POLICE #HUSBAND WIFE #CHENNAI #VADAVALLI POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Confession of husband and wife during police investigation | Tamil Nadu News.