ஆஹா.. வேறமாறி மாறிப்போகும் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை.. செம்ம நியூஸ்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 05, 2022 11:36 AM

சென்னை: சென்னை to பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai-Bangalore expressway is scheduled to begin in April

இந்த கோலத்துலையாமா நான் உன்ன பாப்பேன்.. கதறி துடித்த தந்தை.. நீளமான முடியால் வந்த ஆபத்து

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக சாலை மேம்பாட்டு பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது. இதன்படி பெங்களூர் மற்றும்  சென்னை இடையே 240 கி.மீ-க்கு விரைவுச்சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

வேகமாக தொழில் வளர்ச்சி அடையும்:

கர்நாடகா மாநிலம், ஒசகோட்டாவில் துவங்கும் இந்த விரைவுச்சாலை ஆந்திராவின் சித்துார் மாவட்டம் வழியாக, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள இருகாட்டுகோட்டையில் முடியும் விதமாக அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ நகரமாக விளங்கும் சென்னை மற்றும் பெங்களூருக்கு இந்த விரைவுச் சாலை மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும்போது வாகனங்கள் மணிக்கு, 120 கி.மீ வேகத்தில் செல்ல முடியும் எனவும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் வேகமாக தொழில் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai-Bangalore expressway is scheduled to begin in April

விரைவுச்சாலை பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும்:

தமிழகத்தில் மட்டும் வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக, 106 கி.மீ தொலைவிற்கு இச்சாலை அமைய உள்ளது. மூன்றாம் கட்ட சாலைப்பணிக்கு மட்டும் மத்திய அரசு ஏற்கனவே 3,472 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்கள் நியமிப்பு:

சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை திட்டமானது மத்திய அரசின் கதிசக்தி மாஸ்டர் திட்டத்தில் சேர்ககப்படுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த விரைவுச்சாலை பணிகளுக்காக தமிழ்நாடு வழியாக இயங்கும் 4 பேக்கேஜ்களுக்கும் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் நான்கு வழிச்சாலை, அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலை அமைக்கும் பணி ஏப்ரலில் இருந்து மே மாதத்திற்குள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா:

அதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1,200 கோடி மதிப்பில் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதி சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள் கட்டமைப்பு வசதி இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்யும், அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay வீட்டுக்கு நேரில் போன புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. நீண்ட நேரம் நடந்த ஆலோசனை.. பின்னணி

Tags : #CHENNAI #BANGALORE #EXPRESSWAY #CHENNAI-BANGALORE #விரைவுச்சாலை #சென்னை TO பெங்களூர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai-Bangalore expressway is scheduled to begin in April | India News.