அம்மாவ தப்பா பேசிட்ட இல்ல... நடுராத்திரி 2 மணிக்கு செல்போன் சார்ஜரை எடுத்து.. சென்னையில் நடந்த பயங்கரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: அப்பா மீது ஏற்பட்ட கோவத்தில் சொந்த மகனே சார்ஜர் ஒயர் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் டாக்டர் அம்பேத்கர் குடில் பகுதியில் வசிக்கும் தேசமுத்து (53) என்பவர் பெயின்டர் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர்.
மர்மமான முறையில் மரணம்:
கடந்த 3 ஆண்டுகளாக தேசமுத்துக்கு காசநோய் ஏற்பட்டு படுத்தப் படுக்கையாக உள்ளார். அதோடு அவரின் மனைவியே அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார். இந்நிலையில் காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, தேசமுத்து நேற்று காலை படுக்கையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
பிரேத பரிசோதனை:
இந்த தீடீர் மரணம் குறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவும் தேசமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையில் தேசமுத்துவின் கழுத்து இறுக்கப்பட்டு தான் இறந்துள்ளார் என கூறபட்டுள்ளது.
வாக்குமூலத்தில் தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை:
இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தேசமுத்துவின் மகன்களான டேவிட் என்னும் விஜய் (25 வயது), பாலு (23 வயது) ஆகியோரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதோடு கடைசியாக அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் தாங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த வாக்குமூலத்தில், நேற்று முன்தினம் இரவு தங்களது தந்தை தேசமுத்து அம்மாவை ஆபாசமாகவும், நடத்தை குறித்தும் அவதூறாக பேசி சண்டை போட்டதாக தெரிவித்துள்ளார்.
செல்போன் சார்ஜர்:
அதோடு, மூத்த மகன் டேவிட் பலமுறை தந்தையை கண்டித்தும் அதையே தொடர்ந்து செய்து வந்துள்ளார் தேசமுத்து. இதனால் கடுப்பான மூத்தமகன் டேவிட் சண்டை முடிந்து தேசமுத்து தூங்கிவிட்ட பிறகு நேற்று அதிகாலை 2 மணிக்கு செல்போன் சார்ஜர் போடும் வயரால் தந்தையின் கழுத்தை இறுக்கி துடிக்க துடிக்க கொலை செய்தது தெரியவந்ததுள்ளது.
தந்தைக்கு காசநோய் இருக்கவே, கொலையை மறைக்கும் விதமாக காச நோயையே காரணமாக கூறி தந்தை படுக்கையிலேயே இறந்துவிட்டதாக போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் தந்தையை கொலை செய்த மகன் டேவிட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய செல்போன் சார்ஜர் வயரையும் பறிமுதல் செய்தனர். தந்தையை மகனே கழுத்தை இறுக்கி கொலை செய்த இந்த சம்பவம் கே.கே.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
