வீடு புகுந்து பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற எதிர்வீட்டு வாலிபர்.. சிக்கிய திருநங்கை.. சென்னையில் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இளைஞர் ஒருவர் வீடு புகுந்து இளம் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர்கள் குமார்-சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு அஸ்வினி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அஸ்வினிக்கு வரும் 10-ம் தேதி உறவுக்கார பையனுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.
எதிர் வீட்டு இளைஞர்
இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி எதிர்வீட்டில் வசிக்கும் அருண் என்பவரும், அவரது உடன்பிறந்த திருநங்கை இனியாவும் அஸ்வினியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அருண் வலுக்கட்டாயமாக அஸ்வினியின் கழுத்தில் தாலி கட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வினி தடுத்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை தடுத்தனர்.
தற்கொலை முயற்சி
இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அருணை அடித்து துரத்தி உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அருண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருநங்கை கைது
இந்த நிலையில் இதுகுறித்து அஸ்வினி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அருண் மற்றும் உடந்தையாக இருந்த திருநங்கை இனியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் கட்டாய தாலி கட்ட முயற்சித்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
