அதெப்படி மிதாலியை பார்த்து அப்படி சொல்லலாம்.. கொதித்த இந்திய வீராங்கனை.. இங்கிலாந்து கமெண்ட்டேட்டருடன் வெடித்த வார்த்தை போர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமிதாலி ராஜ் குறித்து இங்கிலாந்து வர்ணனையாளருக்கும், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீராங்கனைக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் கிரிக்கெட்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு வெற்றியுடன் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு மகளிர் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடைபெற்றது.
நியூசிலாந்து
இதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, 50 ஓவர் முடிவில் 270 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 49 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 81 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்கள் எடுத்தார்.
இசபெல் வெஸ்ட்பரி
இந்த நிலையில் மிதாலி ராஜ் நிதானமாக விளையாடியது குறித்து இங்கிலாந்து வர்ணனையாளரும், பத்திரிகையாளருமான இசபெல் வெஸ்ட்பரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்திய கிரிக்கெட்டில் சிறந்த மற்றும் மோசமான விஷயம் என்னவென்றால் அது மிதாலி ராஜ்தான்’ என பதிவிட்டிருந்தார்.
விஆர் வனிதா
இதற்கு பதிலடி கொடுத்த இந்திய கிரிக்கெட் முன்னாள் வீராங்கனை விஆர் வனிதா, ‘அதில் சிறப்பான விஷயம் மட்டுமே உள்ளது. இந்திய கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் கவலைப்படுவதை விட, இங்கிலாந்தைப் பற்றி கவலைப்படுவது உங்களுக்கு நன்மை தரும்’ என பதிவிட்டார்.
மிதாலி ராஜ்
இதற்கு பதிலளித்த இசபெல் வெஸ்ட்பரி, ‘ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிதாலி ராஜ் முற்றிலும் பொருந்த மாட்டார்’ என்று பதில் கூறினார். இதற்கு, ‘இந்தியாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் உங்கள் நாட்டின் காலனித்துவ மனப்பான்மை இன்னும் நீங்கவில்லை’ என காட்டமாக பதிலளித்தார். இருவரும் வார்த்தை போரில் மோதியது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, ஆட்டத்தின் போக்கை பொறுத்தே அதிரடியாக விளையாட வேண்டுமா அல்லது நிதானமாக விளையாட வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியும் என்று மிதாலி ராஜ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.