'அவன் சொன்ன அந்த வார்த்தை'...'தாங்க முடியல'...'கல்லூரி மாணவி எடுத்த முடிவு'...சென்னையில் நடந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 15, 2019 04:13 PM

காதலன் சொன்ன ஆபாச வார்த்தையால், கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

College Girl committed suicide for fight with her boyfriend

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்க்குமார். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு பவானி என்ற மனைவியும், 19 வயதில் வளர்மதி என்ற மகளும் உள்ளனர். வளர்மதி தண்டையார் பேட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வளர்மதி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது பெற்றோரை நிலைகுலைய செய்தது.

இதையடுத்து தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மாணவி எழுதிய கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியது. அதில் ''வளர்மதி புளியந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் என்ற 20 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மணிகண்டன் வளர்மதியை ஆபாசமாக திட்டி இருக்கிறார். இதில் மணிகண்டன் சொன்ன வார்த்தை வளர்மதியை வெகுவாக பாதித்துள்ளது''. இதனால் மனம் உடைந்து போன வளர்மதி, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனிடையே வளர்மதி எழுதிய கடிதம் அவரது பெற்றோரை அதிர செய்தது. இதையடுத்து வளர்மதியின் தற்கொலைகான காரணம் அவரின் கல்லூரி நண்பர்களுக்கு தெரியவர, புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே அனைவரு ஒன்று கூடி, மணிகண்டன் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தனர். காதலன் கூறிய ஆபாச வார்த்தையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #COLLEGE GIRL #PULIYANTHOPE #BOY FRIEND