'அவ இப்டி பண்றத என்னால பாக்க முடியல'.. பேஸ்புக் LIVE-ல் இளைஞர் செய்த உருக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 21, 2019 07:36 PM

ஆக்ரா அருகே உள்ள ராய்பா பகுதியில், தான் விரும்பும் பெண்ணுக்குத் திருமணம் நடப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாததால் 22 வயது இளைஞர் பேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணியுள்ளது.

youth hangs himself while the girl he loved getting marriage

இறப்பதற்கு முன்னதாக ஷ்யாம் ஷிகர்வர் என்கிற இந்த இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதத்தில்,‘நான் அவளை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். வேறு யாரையோ அவள் திருமணம் செய்வதை பார்த்துக்கொண்டு என்னால் உயிருடன் இருக்க முடியாது. அவளை இழந்த மன அழுத்தத்திலும், மனச் சோர்விலும் நான் இருந்ததால், பணிபுரியும் இடத்தில் நிறைய சிக்கல்களை சந்தித்தேன். அதனால் என் வேலையே பறிபோய்விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஷ்யாம், தனது இந்த தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை; முழுக்க முழுக்க, தானே பொறுப்பாவதாகவும் பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிக்கொண்டே, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னதாக தனது பெற்றோரிடமும், சகோதரர்களிடமும் தனது முடிவுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டதோடு, தனது மரணத்துக்குப் பிறகு தன் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி விசாரித்த போலீஸ், ஷ்யாம் ஒருதலை காதலால், இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும், அவர் தற்கொலை செய்துகொண்ட போது, அவர் பணியில் இல்லை என்றும் தெரிவித்ததோடு,  உடற்கூறாய்வு பரிசோதனைக்குப் பிறகே எதுவும் கூற முடியும் என்றும் கூறியுள்ளனர்.

Tags : #SUICIDEATTEMPT #AGRA