'ஒரு குடும்பமே கூட்டாக எடுத்த சோக முடிவு'.. அதற்கு முன் செய்த உறைய வைக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 16, 2019 03:27 PM

திருப்பூரை அடுத்த பல்லடத்தின் அருகே உள்ள மங்கலம் பகுதியில் வசித்துவந்தவர் 70 வயதான துரைராஜ்.

family commits suicide after giving money to do rituals

இவரது மனைவி ராசாத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே காலமாகிய நிலையில், இவருக்கு செல்வி(42), சாந்தி என்ற இரண்டு மகள்களும், கோபாலகிருஷ்ணன் (39) என ஒரு மகனும் உள்ளனர். இவர்களுள் மூத்த மகள் செல்விக்கு திருமணமாகி, திருமண வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

ரகுநாதன் என்கிற அந்த மகனுக்கு 22 வயதே ஆன நிலையில், ரகுநாதன் திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. அதன் பின், நேற்றைய தினம் தனது தங்கை சாந்தியின் ஊருக்குச் சென்ற கோபாலகிருஷ்ணன், சாந்தியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, இன்றைய செலவுக்குத் தேவைப்படும் என்று கூறியுள்ளார். சாந்திக்கு அது புரிந்திருக்க வாய்ப்பில்லை.

பின்னர் வீட்டுக்கு வந்த கோபாலகிருஷ்ணன், துரைராஜ், செல்வி என அனைவருமே தூக்கிட்டுக் கொண்டும் விஷமருந்திக் கொண்டும் உயிரிழந்தனர். இதனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரு குடும்பமே இறுதிச் செலவுக்குண்டான பணத்தொகையை தயார் செய்து கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #THIRUPUR