'35 பந்துகளில்'... 'ருத்ர தாண்டவம் ஆடிய பிருத்வி ஷா!'... 'நியூசிலாந்து சரண்டர்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Jan 22, 2020 04:37 PM

பிருத்வி ஷா-வின் அதிரடியால் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

prithivi shaw brings easy win to India against NZ

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, அதிகாரப்பூர்வமற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபாரமாக பந்து வீசிய இந்திய ஏ அணி, 48.3 ஓவர்களில் 230 ரன்களுடன் நியூசிலாந்தைச் சுருட்டியது. நியூசிலாந்து ஏ அணியில், அதிகபட்சமாக ரவிந்திரா 49 ரன்களும், கேப்டன் புரூஸ் 47 ரன்களும் எடுத்தனர்.

இந்திய ஏ அணி தரப்பில், சிராஜ் 3 விக்கெட்டுகளும், கலீல் அஹமது மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய ஏ அணி, அனல் பறக்க விளையாடியது. வெறும் 29.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் என்ற இலக்கை, இந்திய ஏ அணி எளிதில் எட்டிப் பிடித்தது.

இந்தப் போட்டியில், பிருத்வி ஷா 35 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து அசத்தினார். சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Tags : #CRICKET #PRITHVI #IND #NZ