'இந்தியா மட்டுமா வளரும் நாடு?!'... 'அமெரிக்காவும் தான்!!'... 'ட்ரம்ப்பின் அனல் பறக்கும் பேச்சு'... 'உலக நாடுகள் அதிர்ச்சி!'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jan 23, 2020 12:10 PM

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைப்போல அமெரிக்காவும் ஒரு வளர்ந்து வரும் நாடு தான் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Donald Trump says america is a developing nation

சுவிட்சர்லாந்தில் நடந்து வரும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவையும் சீனாவையும், உலகப் பொருளாதார கூட்டமைப்பு, வளரும் நாடுகளாக பார்க்கிறது. அமெரிக்காவையும் அத்தைகைய பார்வையில், ஒரு வளரும் நாடாகவே கருத வேண்டும் என கூறினார்.

சீனா மற்றும் இந்தியா, இரு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளாக கருதப்படுவதால் உலக வர்த்தகத்தில் அதிக சலுகைகளைப் பெறுகின்றன. எனவே, இந்தியாவும் சீனாவும் வளர்ந்து வரும் நாடுகளாக கருதப்படக்கூடாது என்று தெரிவித்தார். ஆனால், அவ்விரு நாடுகளும் கருதப்படும்போது அமெரிக்காவும் வளர்ந்து வரும் நாடாகவே கருதப்பட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் ட்ரம்ப் உரையாற்றினார்.

பிப்ரவரி மாதத்தில், ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருடைய இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #NARENDRAMODI #TRUMP #USA #INDIA #CHINA