'பிகில்' சிறப்பு காட்சி: 'ஆர்வக் கோளாறால்' இப்படியெல்லாம் பண்றாங்க... அமைச்சர் கடம்பூர் ராஜு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 25, 2019 04:40 PM

கிருஷ்ணகிரியில் ஆர்வக் கோளாறால் விஜய் ரசிகர்கள் இதுபோன்ற ரகளையில் ஈடுபட்டிருப்பார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

vijay fans on bigil special show says kadambur raju

விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும், ‘பிகில்’ படம் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர், தமிழகத்தின் பல திரையங்குகளில், சிறப்புக் காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்படவில்லை எனக் கூறி, விஜய் ரசிகர்கள் நள்ளிரவில் ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, சென்னை விமானநிலையத்தில் பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘விஜய், அஜித், ரஜினி என எந்த நடிகரின் ரசிகர்களாக இருந்தாலும், ஆர்வக்கோளாறில் இப்படி ரகளையில் ஈடுபடுகிறார்கள். கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக் கொண்டதன் பேரிலேயே, பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு அனுமதி தரப்பட்டது. முதல்வர் ஆலோசனையின் பேரிலேயே சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது’ என்று கூறினார்.

Tags : #VIJAY #FANS #BIGIL #MOVIE #KADAMBURRAJU #MINISTER