‘10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 26, 2019 01:25 PM

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain alert in 10 districts IMD Chennai Tamilnadu

தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இன்று பதிவாகக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #WEATHER #HEAVYRAIN #ALERT #IMD #CHENNAI #DISTRICTS