சென்னைவாசிகளே! 'கண்ணீர்' விடவைத்த.. 'தண்ணீர்' பஞ்சம்.. இனி இருக்காது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 09, 2019 08:34 PM
சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு நடத்திய குடிநீர் வாரியம், கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் செப்டம்பரில் நிலத்தடிநீர் மட்டம் கணிசமாக உயர்வு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, கோடம்பாக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 8.1 மீட்டரில் இருந்த நிலத்தடிநீர் மட்டம், தற்போது 7.39 மீட்டராக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டை-யில் 5.98 மீட்டராகவும், ராயபுரத்தில் 7.22 மீட்டராகவும், அண்ணாநகரில் 5.81 மீட்டர் அளவுக்கும் உயர்வு பெற்றுள்ளது.
குறிப்பாக திரு.வி.க. நகரில் 8.26 மீட்டரில் இருந்த நிலத்தடிநீர் மட்டம், தற்போது 5.74 அளவாக உயர்வு பெற்று நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. திருவொற்றியூரில் 4.53 மீட்டரும், சோழிங்கநல்லூரில் 4.52 மீட்டரும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அடைந்துள்ளது.
இதேபோல் தண்டையார் பேட்டை, மாதவரம், அம்பத்தூர், மணலி மற்றும் பெருங்குடி பகுதிகளிலும் நிலத்தடிநீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட வேண்டிய சூழ்நிலை இருக்காது.
