'பத்திரமா இருங்க மக்களே'.. 14 மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 22, 2019 01:44 PM

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கன மழை பொழிவதற்கான பலமான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைப் படுத்தும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளது.

chances of heavy downpour in this 14 TN districts, RMC

வெப்பச் சலனம் காரணமாக தற்போது சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சில இடங்களிலும் தொடர்ச்சியாகவும், சில இடங்களில் இடைவெளி விட்ட படியும் மழை பொழிந்து வரும் நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழை பொழியவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம், வேளாங்கண்ணி, பூவைத் தேடி வேட்டைக்காரனிருப்பு, திருப்பூண்டி காமேஸ்வரம், விழுந்தமாவடி புதுப்பள்ளி, கிராமத்துமேடு உள்ளிட்ட நாகை மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி பணியில் இருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை எதிரொலி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை லேசான மழை பொழியலாம் எனவும், சில இடங்களில் மேகமூட்டமாக வானம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.