'நீ இச்சைக்காக அந்த பொண்ணுகிட்ட போன'... 'நம்ம குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு'... 'கதறிய மனைவி'... தகப்பன் செஞ்ச கொடூர சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எதற்காக இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்தேன் என்பது குறித்து இளைஞர் அளித்துள்ள வாக்குமூலம், காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ். 27 வயதான இவர் வேலைக்குச் செல்லாத நிலையில், கால்நடை பராமரிப்புத்துறையில் ஆய்வாளர் பணிக்கு முயற்சித்து வந்தார். இதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாகப் பயிற்சிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இவரது மனைவி தங்கபுஷ்பம், பட்டாசு ஆலையில் வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார்.
வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்த தங்க புஸ்பம், மகன் மாரீஸ்வரன், மகள் காயத்ரி ஆகிய இருவரும் தரையில் கிடந்துள்ளார்கள். என்ன காரணம் எனப் புரியாமல் தவித்த அவர், குழந்தைகளை எழுப்பியபோது 2 குழந்தைகளும் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் வெளியே ஓடி வந்து குழந்தைகள் இறந்து கிடந்த தகவலைக் கூறினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தந்தை காளிராஜ் குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது.
தந்தையே குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்றது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது காளிராஜ் அளித்த வாக்குமூலத்தில், ''காளிராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பிறகு தனக்கு ஏதாவது நோய் வந்திருக்குமோ என அவர் அச்சத்திலிருந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல அந்த நோய் குழந்தைகள் மற்றும் மனைவிக்கும் பரவி இருக்குமோ என விபரீதமாக எண்ணத் தொடங்கியுள்ளார். குழந்தைகளைக் கொன்று விட்டு, மனைவியையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம், நான் இன்னும் சிறிது காலத்தில் இறந்து விடுவேன் என்றும், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறி வந்துள்ளார். இந்த நிலையில்தான் குழந்தைகளைக் கொன்றதுடன், மனைவியையும் அவர் கொலை செய்யத் திட்டமிட்டது தெரியவந்தது. இதனை அறிந்த மனைவி தங்கபுஸ்பம், உன்னோட இச்சையைத் தீர்க்க போய்ட்டு, எண்டோட குழந்தைகளை அநியாயமா கொன்று விட்டாயே எனக் கதறி அழுதார். தகப்பனே குழந்தைகளைக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
