வீட்டுல 'சண்ட' போட்டுட்டு... ரோட்டுல நடந்து போன பொண்ணு... காரில் 'தம்பதி' கொடுத்த 'லிப்ட்'... 'சிறுமி'க்கு நேர்ந்த 'கொடூரம்'! - பதைபதைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் 8 வயது சிறுமி விகா டெப்லியாகோவா ஒருவர் தனது பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள தனது நண்பர்களின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

அப்போது சிறுமி விகா சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. அதன் பின்னர், சிறுமி நண்பர்கள் வீட்டிற்கும் செல்லாத நிலையில் மூன்று நாட்களாக மாயமான சிறுமியை போலீசார் மேற்பார்வையில் சுமார் 500 பேர் தேடினர்.
போலீசார் விசாரணையில், கிறிஸ்டினா என்ற பெண்மணி அந்த சிறுமிக்கு காரில் லிப்ட் கொடுத்ததாகவும், அதன் பின்னர் அந்த சிறுமியை தான் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட, அவரிடம் விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.
சிறுமி விகா சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியே காரில் வந்த கிறிஸ்டினா மற்றும் அவரது கணவர் இகோர் ஆகியோர் காரில் லிப்ட் கொடுப்பது போல நடித்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் தனது மனைவியின் முன்னால் வைத்தே இகோர் சிறுமியை சீரழித்துள்ளார். அப்போது சிறுமிக்கு அதிகம் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அந்த தம்பதி, அருகிலுள்ள ஏரி ஒன்றின் கரையில் உடலை புதைத்துள்ளனர்.
தொடர்ந்து உடலை புதைத்த இடத்தையும் கிறிஸ்டினா போலீசாரிடம் காட்டியுள்ளார். சிறுமியை கடத்தி சீரழித்து பின்னர் கொலை செய்த தம்பதியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
