"அவருக்கு 'வலிச்சா' என்னால தாங்க முடியாது... அதனால தான்..." புருஷனுக்கு 'தூக்க' மாத்திரை கொடுத்து... மயக்கத்திலேயே கொடூரமாக 'கொலை' செய்த மனைவி! - போலீஸ் தரும் 'அதிர்ச்சி' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jul 09, 2020 10:57 PM

திருமணைத்தை மீறிய உறவு வைத்திருந்த மனைவி, தன்னுடைய கணவனை மின்சார 'ஷாக்' (electric shock) கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rajasthan barmer wife kill husband by electric shock pills love

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வசிப்பவர்கள், மனராம்-பப்பு தேவி தம்பதி. 30 வயதான பப்பு தேவி, கணவனுக்கு தெரியாமல் வேறொரு நபருடன் உறவு வைத்துள்ளார். இது, பின்னாளில் கணவன் மனராமுக்கு தெரியவந்துள்ளது.

அதை அறிந்து கொண்ட பப்பு தேவி, மனராமை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி, மனராம் தூங்குவதற்கு முன்பு, அவருக்கே தெரியாமால் தூக்கு மாத்திரை கொடுத்துள்ளார் பப்பு தேவி. அதைத் தொடர்ந்து, தன்னுடைய காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் மயக்க நிலைக்குச் சென்ற கணவனைப் பிடித்து இழுத்து, அவரது விரல்களில் 'கரண்ட் ஷாக்' கொடுத்து கொடூரமாக இருவரும் கொலை செய்துள்ளனர். இதில், மனராம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தின் போது, மனராமின் காலில் அடிபட்டு ரத்தம் கசிந்துள்ளது. ஆனால், இவை அனைத்தையும் மறைத்து நல்லவர் போல் உறவினர்களிடம் பப்பு தேவி இத்தனை நாட்கள் நாடகமாடியுள்ளார். இதற்கிடையே, காவல்துறை நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் தாம் தான், கொலையைச் செய்ததாக பப்பு தேவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதை அறிந்த உறவினர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajasthan barmer wife kill husband by electric shock pills love | India News.