'என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டு... நீங்க ஜாலியா வெளில சுத்திட்டு இருக்கீங்களா'!? பழிக்குப் பழி தீர்க்க... டிராக்டரால் உடலை சிதைத்து... அம்மா-மகள் கொடூரக் கொலை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலியல் வன்புணர்வு வழக்கில் சிறைக்குச் சென்ற கைதி, ஜாமினில் வெளியே வந்த போது பாதிக்கப்பட்ட சிறுமியையும், அவரது தாயாரையும் டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொலை செய்துள்ளான்.

உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யஷ்வீர். தன் குடும்பத்தாரிடம் நட்பு பாராட்டி வந்த பக்கத்து வீட்டாரின் சிறுமியை, கடந்த 2016ம் ஆண்டு அவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டபோது அந்த சிறுமிக்கு 13 வயது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, யஷ்வீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது ஜாமினில் வெளியே வந்த பாலியல் குற்றவாளி யஷ்வீர், பாதிக்கப்பட்ட சிறுமி (வயது 17) மற்றும் அவரது தாயார் ரோட்டில் சைக்கிளில் செல்வதைப் பார்த்துள்ளான். நீண்ட நாட்களாக, அக்குடும்பத்தை பழி தீர்க்க, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளான். உடனே, அருகிலிருந்த ஒரு டிராக்டரை எடுத்து வந்து, சாலையில் சென்று கொண்டிருந்த அம்மா-மகள் மீது மோதியுள்ளான். மேலும், அவர்கள் உடல் டிராக்டர் டயரால் சிதைக்கப்படும் வரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.
அதைத் தொடர்ந்து, மீண்டும் அவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
