பசங்க, பொண்டாட்டிய 'கொலை' பண்ணிட்டேன்... போன் போட்டு சொன்ன கணவர்... வீட்டுக்கு சென்று 'உறைந்து' போன உறவினர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹோட்டல் தொழில் நடத்தி வந்த ஜக்தீப் அதிகளவு கடன் வாங்கிவிட்டு அதை செலுத்த முடியாமல் திணறி இருக்கிறார். ஊரடங்கு காரணமாக மீண்டும் ஹோட்டலை திறக்க முடியவில்லை.

இதனால் மனம் நொந்து போன அவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தன்னுடைய உறவினர்களுக்கு போன் செய்து சொல்லி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அவர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்து உறைந்து போயினர்.
ஏனெனில் அங்கு ஜக்தீப் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் கடன் தொல்லையால் ஜக்தீப் இந்த முடிவை எடுத்தது தெரிய வந்தது. அழகான குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் இறந்து போனது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
