“பொண்டாட்டிய கொல்வது எப்படி.. கூலிப்படை எங்க கெடைப்பாங்க?”.. காட்டிக் கொடுத்த சர்ச் ஹிஸ்டரி.. மனைவிக்கு நேர்ந்த சோகம்... அதிர்ச்சியை ஏற்படுத்தும் ‘காரணம்’!
முகப்பு > செய்திகள் > உலகம்மனைவியை கொல்வது எப்படி? என் மனைவியை கொல்ல ஒரு நண்பரை சேர்த்துக் கொள்ளலாமா? பிரிட்டனில் மனைவியை கொள்வதற்கான கூலிப்படையினரை எங்கே சென்று தேடுவது? இப்படியெல்லாம் பிரிட்டன் இணையதளத்தில் கணவர் ஒருவர் தேடி இருக்கிறார்.

கடைசியில் தன் மனைவியை கொன்ற வழக்கில் இந்த தேடல்கள்தான் முக்கிய சாட்சியங்களாகவே மாறியுள்ளன. பிரிட்டனில் மிடில் பிராவில் வாழ்ந்துவந்த 34 வயதான ஜெஸ்ஸிகா பட்டேல் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தன் மனைவியை கொன்றதாக ஜெசிகாவின் கணவர் மித்தேஷ் தெரிவித்தார். ஆனால் அது நாடகம் என்பதும் ஜெசிகாவை பிளாஸ்டிக் கவர் ஒன்றால் கழுத்தை நெரித்து மித்தேஷ்தான் கொன்றுள்ளார் என்பதும் மித்தேஷின் ஐபோனை ஆராய்ந்தபோது தெரியவந்துள்ளது.
அதிக மருந்தைக் கொடுத்து கொல்வது முதல் ஆள் வைத்துக் கொல்வது வரை நீண்ட காலமாகவே தன் மனைவியை எவ்வாறு கொல்லலாம் என மித்தேஷ் திட்டம் தீட்டியிருந்துள்ளார். இதற்கு காரணம் மித்தேஷ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதுதான். ஜெசிகாவை கொன்றுவிட்டு அவருடைய இன்சூரன்ஸ் பணத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தனது ஓரினச்சேர்க்கை காதலருடன் வாழ்க்கையை தொடங்குவதுதான் மித்தேஷின் திட்டம்.
ஆனால் விதி போட்ட திட்டம் மாறியதால் 30 ஆண்டுகளுக்கு சிறையில் இருந்து வர முடியாத வகையில் மித்தேஷுக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெசிகா கொலை தொடர்பாக பல ஏஜென்சிகள் இணைந்து ஆய்வு நடத்தியபோது மகளை இழந்த வேதனையின் மத்தியிலும் இப்படிப்பட்ட குடும்ப வன்முறைகள் இனி நிகழக் கூடாது என்பதற்காக ஜெசிகாவின் பெற்றோரும் இந்த ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், “உங்கள் பிள்ளைகள் திருமணத்துக்குப் பின் நன்றாக இருக்கிறார்கள் என நீங்களே முடிவு செய்துக் கொள்ளாதீர்கள்” என்று ஜெசிகாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
