"அவங்க தான் எல்லாதுக்கும் காரணம்... ஒவ்வொருத்தரா கொலை பண்றாங்க"!.. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்!.. 'சத்தமில்லாம ராத்திரில வந்து'... வயதான தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூரில் சூனியம் வைத்ததாக கூறி வயதான தம்பதியினரை கிராம மக்கள் வீட்டுடன் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நிமபாலி கிராமத்தில் வயதான தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கிராம மக்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மக்களிடம் இருந்து ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அக்கிரமாத்தில் கடந்த சில தினங்களாக வெவ்வெறு காரணங்களுக்காக சிலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதனால், அச்சமுற்ற கிராமமக்கள் அந்த வயதான தம்பதியினர் தான் சூனியம் வைத்திருக்க வேண்டும் என சந்தேகித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு அந்த வயதான தம்பதியினரின் வீட்டருகே சென்ற கிராம மக்கள் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேலையில் வீட்டை தீயிட்டு கொளுத்தினர். இதில் தம்பதிகள் இருவரும் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், தம்பதியினர் எந்த சூழ்நிலையில் இறந்தார்கள் என்பது தொடர்பாக விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எரிந்த உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சூனியம் வைத்ததாக சந்தேகத்தின் பேரில் இந்த தம்பதியினர் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாகவும் விசாரணை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
ஜஜ்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் இம்மாதத்தில் இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சூனியம் செய்ததாக கிராம மக்களால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
