சாத்தான்குளம்: 9 வயது சிறுமி கொலைக்கான 'காரணம்' என்ன?... 'பிரேத' பரிசோதனை அறிக்கை வெளியானது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் அருகே 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்விளை என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள ஓடை பாலம் அருகே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுவர்கள் அங்கு கிடந்த டிரம்மை சென்று பார்த்தனர். அதில் சிறுமி கழுத்து, உதடுகளில் காயத்துடன் பிணமாக கிடந்தாள்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் இதுதொடர்பாக முத்தீஸ்வரன் (19), நித்தீஸ்வரன்(19) என்னும் இருவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், கழுத்து இறுக்கியதில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் சிறுமியின் கொலைக்கான காரணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
