'சாத்தான்குளம் சிறுமி கொலை'... விசாரணையில் வெளியான 'காரணம்'... இதுக்காகவா டா அந்த 'கொழந்தை'ய கொன்னு 'டிரம்'முல அடைச்சீங்க??!.. பதற வைக்கும் 'பின்னணி'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் சிறுமி கொலை தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ள நிலையில், சிறுமியை கொலை செய்ததற்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை அடுத்த கல்விளை இந்திரா நகரை சேர்ந்த சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக, சிறுமி அருகிலுள்ள இளைஞர் ஒருவர் வீட்டில் டிவி பார்க்க சென்றுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்த அந்த இளைஞர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து டி.வி,எஸ் எக்ஸ் எல் வாகனத்தில் ஒரு சின்ன ட்ரம்முடன் சென்றதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர்.
அப்போது பாலத்தின் அருகே, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், 7 வயது சிறுமியின் உடல் ட்ரம்மில் இருப்பதை பார்த்து விட்டு அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசார்ணையில், சந்தேகத்தின் பெயரில் அந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், கழுத்து இறுக்கியதில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு இளைஞர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி அவர்களின் வீட்டிற்கு டிவி பார்க்க வந்த போது, அந்த இளைஞர் யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, சிறுமியும் டிவி சேனலை மாற்ற வேண்டும் என கூறி அடம்பிடித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மேலும் கடுப்பான அந்த இளைஞர், தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
டிவி பார்க்க ஆசைப்பட்ட சிறுமியை, இரண்டு பேர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
