"மிட்டாய் வாங்க போறேன்னு காலையில கெளம்புனவ"... 'கடைசி'யில இப்டி தான் எங்க 'பொண்ண' பாக்கணுமா ஆண்டவா??... 'தண்ணீர் ட்ரம்'மிற்குள் சடலமாக கிடந்த 7 வயது சிறுமி!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வடலிவிளை பகுதியில் 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடலிவிளை அருகே இந்திராநகர் என்னும் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் 7 வயது மகள், தனது பெற்றோர்களிடம் கடைக்கு சென்று மிட்டாய் வாங்கி விட்டு வருவதாக சொல்லி விட்டுச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வராததால், பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னர், சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காட்டுப்பகுதியின் கால்வாய் அருகே தண்ணீர் டிரம் ஒன்றில் சிறுமி சடலமாக கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். தண்ணீர் டிரம்மிற்குள் உடல் கிடந்ததால் சிறுமியை யாரோ கொலை செய்து விட்டு அதில் வீசியிருக்கலாம் எனவும் தெரிகிறது.
மேலும், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்,சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கடைக்கு போவதாக கூறி சென்ற மகள், சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மிகுந்த மனவேதனையில் சிறுமியின் குடும்பத்தினர் உள்ளனர். தங்களுக்கு யாருடன் முன்பகை எதுவும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இருவரை போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் ரீதியாகவும் அல்லது வேறு சில காரணங்களுக்காகவும் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவது தமிழக மக்களிடையே பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
