VIDEO : கொல வெறியோட மொத்தம் 28 'கத்தி'குத்து... "நாங்க 'பைக்' ரேஸ் பண்ணா உனக்கு என்ன வந்துச்சு???"... '17' வயது சிறுவர்கள் செய்த கொடூரம்... பதறவைக்கும் 'CCTV' காட்சி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு டெல்லியின் ரகுபிர் நகர் என்னும் பகுதியில் சில தினங்களுக்கு முன் மூன்று சிறுவர்கள் இளைஞர் ஒருவரை கத்தியால் கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியை அதிர வைத்த இந்த வீடியோ காட்சிகள், சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் நடுரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் வைத்து அரங்கேறியுள்ளது. அந்த வீடியோவில், 17 வயது சிறுவர்கள் மூன்று பேர் 25 வயது இளைஞர் ஒருவரை தரதரவென இழுத்துச் சென்று தங்களது கையில் வைத்திருந்த கத்தியைக் கொன்று சரமாரியாக அந்த இளைஞரை குத்துகின்றனர். சுற்றி பொது மக்கள் சூழ்ந்து நிற்க இந்த கொடூரம் நடைபெற்ற நிலையில், அதில் சிறுவர் ஒருவர் மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் இளைஞரை குத்துவது சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
பின்னர் மூன்று சிறுவர்களும் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். 28 கத்திக்குத்துகள் காரணமாக அந்த இளைஞர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் உயிரிழந்தார். அதிலும் நெஞ்சுப் பகுதியில் சிறுவர்கள் அதிகமாக குத்தியுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞர் மனிஷ் என்பது தெரிய வந்தது. அந்த மூன்று சிறுவர்களும் பைக் பந்தயம் மற்றும் ஸ்டண்ட்ஸ் ஆகியவற்றில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அந்த மூன்று சிறுவர்களில் ஒருவர், மனிஷ் வசிக்கும் இடத்திற்கு அருகில் பந்தயத்தில் ஈடுபட்ட நிலையில் அதனை மனிஷ், இனிமேல் இந்த பகுதிகளில் பைக் பந்தயம் மேற்கொள்ளக்கூடாது எனக் கூறி கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த சிறுவன் தனது நண்பர்கள் இருவரை இணைத்துக் கொண்டு இளைஞர் மனிஷை நடுரோட்டில் வைத்து கொலை செய்துள்ளனர். சிசிடிவி கொண்டு சிறுவர்களை அடையாளம் கண்ட போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் இன்று கைது செய்தனர்.

மற்ற செய்திகள்
