'சின்னப்பசங்க' கிண்டலடித்த நியூசி.வீரர்... ஐபிஎல்ல வா 'ராசா' ஒன்ன வச்சு செய்றேன்... கெத்து 'ரிப்ளை' கொடுத்த கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 12, 2020 11:31 PM

நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்யும்போது, அவருக்கும் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமுக்கும் இடையே சிறு உரசல் ஏற்பட்டது. ராகுல் பந்தை அடித்துவிட்டு ஓடும்போது அந்த ஓவரை வீசிய நீஷம், ராகுலுக்கு எதிரே வந்தார். இதனால் சற்று விலகி ஓடவேண்டிய சூழ்நிலை ராகுலுக்கு ஏற்பட்டது.

\'Let\'s settle this in April\' KL Rahul responds to Neesham

தொடர்ந்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் பெரிய பிரச்சினை எதுவும் இன்றி இருவரும் விலகி சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீஷம் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்து, ''Paper, scissors, rock?'' (சிறுவர்கள் விளையாடும் போட்டி) என கேலியாக பதிவு செய்தார்.

இதைப்பார்த்த ராகுல், '' ஏப்ரல் மாதம் இதை தீர்ப்போம். அப்போது உன்னை பார்த்துக் கொள்கிறேன்,'' என்று பதில் அளித்து இருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஜிம்மி நீஷம் விளையாடவிருக்கும் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் என்பது தான். ஒரு கேப்டன்னு கூட பாக்காம இப்டியா கிண்டல் செய்றது?