‘காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி’.. ‘ஊரே ஒன்றுகூடி செய்த காரியம்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சி வீடியோ’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 17, 2019 04:04 PM
ஆந்திராவில் திருமணம் செய்துகொள்வதற்காக உறவுக்கார இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை முதியவர் ஒருவர் அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கேபி தோடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 20 வயதான தனது உறவுக்கார இளைஞருடன் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையறிந்த கிராம மக்கள் அவர்கள் இருவரையும் பிடித்துவந்து எச்சரித்துள்ளனர்.
அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சில கேள்விகளைக் கேட்டு கிராம மக்கள் முன்பு சிறுமியையும், அந்த இளைஞரையும் தடியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர் சமாதானம் செய்துவைத்த ஊர்மக்கள் இருவரையும் அவர்களுடைய பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#AndhraPradesh : In a shocking incident a minor couple was allegedly beaten in #Anantapur district. Based on the video evidence a suo moto case has been booked against the man for mercilessly beating the girl and the boy pic.twitter.com/w09lXhrPXg
— Anusha Puppala (@anusha_puppala) August 17, 2019
