‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 16, 2019 01:22 PM
கர்நாடகாவில் குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள தட்டஹள்ளியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (36). இவருடைய தந்தை பட்டாச்சார்யா, தாய் ஹேமலதா, மனைவி நிகிதா மற்றும் மகன் ஆர்ய கிருஷ்ணா. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் குண்டுலுபேட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று ஓம் பிரகாஷ் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு ஓம் பிரகாஷ் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஓம் பிரகாஷூக்கு சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடன் பிரச்சனை காரணமாக தான் ஓம் பிரகாஷ் இந்த முடிவை எடுத்தாரா என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
