‘புகழ்பெற்ற திருவிழாவின் இன்னொரு முகம்’.. ‘வெளியான அதிர வைக்கும் புகைப்படத்தால்..’ வலுக்கும் கண்டனம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Aug 15, 2019 09:49 AM

இலங்கையின் புகழ்பெற்ற புத்தசமய திருவிழாவான பெரஹரா விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

Sri Lanka 70 year old ailing elephant forced to walk in Festival

இலங்கையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் பெரஹரா விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் கண்டியில் உள்ள புத்தரின் பாதுகாக்கப்பட்ட புனிதப் பல் அடங்கிய கலசம் அலங்கரிக்கப்பட்டு யானை மீதி வைக்கப்பட்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.  இதில் 50க்கும் மேற்பட்ட யானைகளும், 2000க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்பார்கள்.

இந்நிலையில் யானைகளைப் பாதுகாக்கும் தாய்லாந்து தொண்டு நிறுவன அறக்கட்டளை ஒன்று பெரஹரா விழாவில் பங்கேற்கும் யானைகளுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானை எலும்பும் தோலுமாக இருக்கும் அதிர வைக்கும் புகைப்படங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தினமும் மாலை அணிவகுப்பில் பங்கேற்கும் டிக்கிரி யானை பல கிலோமீட்டர் தூரம் நடக்கவும், வலுக்கட்டாயமாக பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் வேண்டியுள்ளது. டிக்கிரியின் உடையின் காரணமாக எலும்பும் தோலுமான உடலோ அல்லது பலவீனமான நிலையோ யாருக்கும் தெரியாமல் உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுத வேண்டும் என இலங்கை மக்களை தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து பேசியுள்ள கோயில் செய்தித்தொடர்பாளர், “நாங்கள் எப்போதும் விலங்குகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளோம். டிக்கிரியை மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார். தாய்லாந்து தொண்டு நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் யானைகளுக்கு இதுபோல நடக்கும் கொடுமைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

Tags : #SRILANKA #PERAHERA #FESTIVAL #TIKIIRI #SHOCKING #PHOTO #SAVE #ELEPHANT