‘அஞ்சாநெஞ்சம் கொண்ட கொரோனா!’... ‘இந்த ரெண்டு பேரை பார்த்து பம்புகிறதா?’.. சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் ‘தகவல்!’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 16, 2020 03:32 PM

தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பொருள்களுள் ஒன்றாகவும், செரிமானம் ஆவதற்கான முக்கியமான நீர்ம உணவாகவும் கருதப்படுவது ரசம்.

Coronavirus: \'Rasam Powder\' to the rescue? goes viral on net

இந்த ரசம்தான் தற்போது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்துவரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான சிறந்த உணவு என்கிற தகவலை அடுத்து தற்போது பிரபலமாகியுள்ளது. இந்த ரசத்தில் சேர்க்கப்படும்  மிளகு, பூண்டு உள்ளிட்டவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதாக முகநூல்களில் அதிகம் பகிரப்படுகின்றன.

இந்நிலையில் சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ரசப்பொடி அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதேபோல் மஞ்சளை மோரில் கலந்து சாப்பிட்டால் கொரோனாவை எதிர்கொள்ள முடியும் என்பதால் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொடிக்கும் கூட வெளிநாடுகளில் அதிக கிராக்கி உண்டாகியுள்ளதாக தெரிகிறது. எனவே ரசம் சாப்பிடுங்கள் நலமுடன் வாழுங்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகின்றனர்.

Tags : #RASAM #CORONAVIRUS