'அமமுக-வின் அமைப்புச் செயலாளராக பிரபல காமெடி நடிகர் நியமனம்'.. டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 12, 2019 01:00 PM

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயலாளராக பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் உட்பட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Actor Senthil becomes organization secretary of AMMK

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய பிரதிநிதிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிமுகப்படுத்தியதோடு, அவர்வர்க்குண்டான பதவிகளையும் அறிவித்தார். முன்னதாக தூத்துக்குடி வடக்கு மாட்ட செயலாளராக சுந்தர்ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக புவனேஸ்வரனை நியமித்து டிடிவி தினகரன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மன்னார்குடியைச் சேர்ந்த சிவா ராஜா மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு, தேவதாஸ், ஹென்றி தாமஸ் மற்றும் நகைச்சுவை நடிகர் செந்தில் ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #TTVDHINAKARAN #AMMK #TNPOLITICS #ACTORSENTHIL