'இழந்த இடத்தை மீண்டும் பிடிச்சிருக்கேன்'... 'சந்தோஷத்தில் கண்ணீர் விட்ட வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 06, 2019 04:27 PM

தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஊக்கத்தால், தான் இழந்த இடத்தை மீண்டும் அடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Emotional Steve Smith Revels in Ashes Centuries

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியபோது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஸ்மித், ஓராண்டு தடைக்கு பின்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினார். உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்மித், அதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்துக்கு எதிரான நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமே அந்த அணியின் பேட்ஸ்மேனான ஸ்மித் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்துதான். இதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் பேசிய ஸ்மித், ‘மீண்டும் ஆஷஸ் தொடரில் நான் பங்குபெற்று ஆடுவேன் என்று தடைக்காலத்தில் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

ஆனால் தற்போது மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நான் ஆஷஸ் தொடரில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் சதம் அடித்த போது, முதல் போட்டியில் சதமடித்த மகிழ்ச்சி இருந்தது. 18 மாதங்கள் தடையில் இருந்தபோது எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தினால் தான் நான் மீண்டும் இழந்த இடத்தை அடைந்துள்ளேன். எங்களின் வெற்றி தொடரும் என்று நம்புகிறேன்’ என்று ஸ்மித் கூறினார்

Tags : #STEVESMITH #AUSTRALIA #ASHES #ENGLAND