'உன் ட்ரஸ்ஸ கிழிக்க போறேன்!'.. இரவு நேர யூபர் டிரைவரால் 'இளம் பெண்ணுக்கு' நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 05, 2019 12:51 PM

பெங்களூருவில், பணிமுடிந்து தோழிகளுடன் அவுட்டிங் சென்றுவிட்டு வந்து யூபர் கேபில் ஏறியமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கிடுகிடுக்க வைத்துள்ளது.

\'will tear clothes\', uber driver threatens woman customer

கடந்த சனிக்கிழமை அன்று இரவு 11 மணி அளவில், யூபர் கேப் புக் செய்து தோழிகளிடம் பய் சொல்லிவிட்டு ஏறியுள்ளார் இளம் பெண் ஒருவர். அவர் தனது பேஸ்புக்கில் எழுதியுள்ள குறிப்புகளின்படி, அந்த டிரைவர், போனில் யாருடனோ,  தனது கஸ்டமர் மோசமானவராய் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருந்துள்ளார்.

முதலில் இதைக் கேட்டு அதிர்ச்சியான பெண், அமைதியாக இருக்க, அந்த டிரைவரோ, போனை வைத்துவிட்டு, இனிமேல் இதுபோன்று தாமதமாக தோழிகளுடன் வெளியில் சென்றுவிட்டு, மது அருந்திவிட்டு வராதீர்கள் என கூறியிருக்கிறார். அதற்கு இந்த பெண்ணோ, உங்கள் வேலை என்னவோ அதைப் பாருங்கள் என கூறிக் கொண்டே, தனது காரை ஒரு ஓரமாக நிறுத்தப் போக, அதற்குள் இந்த பெண் எமர்ஜென்ஸி ப்ரஸ் பட்டன் ஆப்பினை போனில் அழுத்தியுள்ளார்.

ஆனால், அதை அழுத்தியதும், யூபர் டிரைவருக்கு கஸ்டமர் கேரில் இருந்து போன் வந்துள்ளது. டிரைவரோ கஸ்டமர் குடித்துவிட்டு வந்திருப்பதாக, போனில் கூற, அந்த போனை வாங்கி பேசிய இளம் பெண், போனில் பேசிய கஸ்டமர் கேட் பெண்ணிடம் தனக்கு உதவுமாறு கேட்டு கதறியுள்ளார். உடனே அந்த கஸ்டமட் கேர் பெண், இந்த கேபிலிருந்து இறங்குமாறும், அவருக்கு வேறு ஒரு கேப் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, அந்த டிரைவர், இந்த பெண்ணிடம் மிகவும் கடினமாக, இறங்குகிறாயா? இல்லையா? இறங்காவிடில்  ஆடைகளை கிழிக்கப் போகிறேன் என்று பேசியுள்ளார்.  பதற்றமாக கேபில் இருந்து இறங்கியபோதுதான் தெரிந்தது, ஆள் அரவமற்ற பகுதியில் இரவு 11.15 மணிக்கு அந்த கேப் டிரைவர் தன்னை இறக்கிவிட்டு சென்றிருப்பது. அதேசமயம், மாற்று கேபும் வராததால், அந்த பெண் தனது நண்பர்களின் உதவியுடன் வீட்டினை அடைந்தார்.

Tags : #TAXI #UBER #WOMAN #DRIVER #BIZARRE #SAFETY