பேஸ்புக் ஃபேக் ஐடில 'அப்லோட்' பண்ணினப்போதான் எங்களுக்கே தெரிஞ்சுது...! 'சிறார் ஆபாசப்பட விவகாரம்...' தட்டித் தூக்கிய போலீசார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 12, 2020 10:29 AM

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சிறார்களின் ஆபாசப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Man arrested for uploading child videos on social media

மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி என்ற நபர் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் உள்ள பல்வேறு  ஓட்டல்களில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆபாச இணையதளங்களில் இருந்து சிறுமிகளின் ஆபாசப்படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து, தனது போலியான முகநூல் பக்கத்திலும், வாட்ஸ் அப்பிலும் அதனை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சமூக ஊடகவியல் பிரிவினர், சமூக ஊடகங்களை கண்காணித்து வந்தபோது குருசாமியின் இந்த செயலை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து குருசாமியை ஜேடர்பாளையம் போலீசார் தீவிரமாக கண்காணித்து , சரியான நேரத்தில் கைது செய்தனர். மேலும் குருசாமியின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : #PHOTOS