9 வருஷ நட்பு.. திடீர்னு ஹிட்மேனை 'அன்பாலோ' பண்ண ஆல்ரவுண்டர்.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 21, 2019 12:56 PM
கிரிக்கெட் போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்ற ஐபிஎல் போட்டிகளில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. நாட்டுக்காக ஒரே அணியில் ஆடும் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பிரிந்து ஆடுகின்றனர். அங்கு அவர்களுக்கு கிடைக்கும் நட்புகள் ஐபிஎல் போட்டிகளை மேலும் வலுவாக்குகின்றன.
ஐபிஎல் போட்டிகள் முடிந்தாலும் கூட சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஒருவரையொருவர் பின்தொடர்வது, பேசிக்கொள்வது என தங்கள் நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றனர். சமயங்களில் ஒருவரை மற்றவர் சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்வதும் உண்டு.
அப்படியொரு சம்பவம் தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை ட்விட்டரில் ஆல்ரவுண்டர் பொல்லார்டு அன்பாலோ செய்துள்ளார். பொல்லார்டு 2010-ம் ஆண்டில் இருந்து மும்பை அணிக்காக ஆடிவருகிறார். ரோஹித் 2011-ம் ஆண்டில் மும்பை அணிக்குள் நுழைந்தார்.
கிட்டத்தட்ட 9 வருடமாக இருவரும் ஒரே அணிக்காக ஆடிவருகின்றனர். ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாகவும் அணியை வழிநடத்தி வருகிறார். இருவருக்கும் இடையில் நல்லதொரு நட்பும் இருக்கிறது. இந்தநிலையில் தான் பொல்லார்டு இப்படி செய்திருக்கிறார். வங்கதேச தொடரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி விளையாடவிருக்கிறது.
அதற்கு முன்பாக பொல்லார்டு இப்படி செய்துள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடர் தான் காரணமா? என்ற சந்தேகமும், ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.