‘ஓடும் தனியார் கல்லூரிப் பேருந்திலிருந்து’... ‘தனியாக கழன்று விழுந்த டீசல் டேங்க்’... 'அதிர்ச்சியான டிரைவர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 23, 2019 12:12 PM

விருத்தாச்சலம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் கல்லூரிப் பேருந்திலிருந்து, திடீரென டீசல் டேங்க் கழன்று விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Diesel Tank which fell off from the private college bus

பெரம்பலூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று விருதாச்சலம் பகுதிகளிலிருந்து, சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. கல்லூரிப் பேருந்து பெண்ணாடம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்திலிருந்து திடீரென டீசல் டேங்க் கழன்று விழுந்தது. இதனை அறிந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மாணவர்களை மாற்றுப் பேருந்து மூலம் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  அங்கிருந்த கிராம மக்கள் உதவியுடன் டீசல் டேங்கை பத்திரமாக அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PERAMBALUR #COLLEGE #DIESEL #TANK