‘பெற்றோர்களே உஷார்’.. ‘ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட அடுத்த நொடி’.. ‘தாய் கண்முன்னே சுருண்டு விழுந்த குழந்தை’.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Aug 18, 2019 01:37 PM
ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் 4 வயது குழந்தை மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி சசிதேவி. இவர்களுக்கு 4 வயதில் ரெங்கநாதன் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் சசிதேவி தனது மகனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்போது ரெங்கநாதன் திண்பண்டம் கேட்டு அடம்பிடித்துள்ளான். இதனால் சசிதேவி அருகில் உள்ள பெட்டி கடை ஒன்றில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் ஜெல்லி மிட்டாயை வாங்கி கொடுத்துள்ளார்.
இதனை சாப்பிட்ட குழந்தை ரெங்கநாதன் மூச்சு திணறி தாய் கண்முன்னே மயங்கி விழுந்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சசிதேவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ரெங்கநாதனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால்தான் குழந்தை உயிரிழந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட கடையில் உள்ள ஜெல்லி மிட்டாய்களை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜெல்லி மிட்டாய் உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்த கூடியது என்றும் சாப்பிடும்போது இதுபோன்ற அடைப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சௌமியா தெரிவித்துள்ளதாக புதிய தலைமுறை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2017 -ம் ஆண்டு கேரளாவில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு 4 வயது குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.