‘காலேஜ் பொண்ணுங்களா கடத்திட்டு வந்து’.. ‘கணவன், மனைவியின் வாக்குமூலத்தைக் கேட்டு’.. ‘உறைந்துபோன போலீஸார்’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Aug 26, 2019 03:58 PM
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதி இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அந்த வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்துவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராவல்பிண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னை ஒரு தம்பதி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர், “கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு பெண் தன்னை கல்லூரி மாணவி என என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு சகஜமாகப் பேசத் தொடங்கினார். பின்னர் தன்னை அழைத்துச் செல்ல சகோதரர் வருவதாகவும், போகும் வழியில் என்னையும் இறக்கிவிடுவதாகக் கூறினார்.
சிறிது நேரத்தில் ஒருவர் காரில் அங்கு வர, நான் எவ்வளவு வேண்டாமென மறுத்தும் அந்தப் பெண் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினார். சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என அவர்கள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றவர்கள் என்னை அங்கு வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்கள். அதை அந்தப் பெண் வீடியோ, புகைப்படம் எடுத்து நடந்ததை வெளியே சொன்னால் இதை இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என மிரட்டினார்” எனக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்தப் பெண் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த தம்பதி பிடிபட்டுள்ளனர். பின்னர் போலீஸாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், மாணவிகளை தங்களுடைய வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை புகைப்படம், வீடியோவாக எடுத்து ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து வந்ததாகக் கூறியுள்ளனர். மேலும் இதுவரை 45 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அதில் சிலர் சிறுமிகள் எனவும் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவர்களிடமிருந்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள போலீஸார், அவர்களுடைய வாக்குமூலம் கேட்பதற்கே அதிர்ச்சியாக இருந்ததாகவும், அவர்கள்மீது கடுமையான வழக்குகளைப் பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.