பழனி பஞ்சாமிர்த கடைகளில் திடீர் வரிமான வரி சோதனை..! பக்தர்கள் மத்தியில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Aug 30, 2019 08:35 PM
பழனியில் உள்ள பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளானமான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். தமிழகம் முழுவதும் பழனி பஞ்சாமிர்ததுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் பழனியில் உள்ள பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால் சாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பழனி பஞ்சாமிர்தத்துக்கு சமீபத்தில் புவிசார் குறீயீடு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.