‘சென்னை அருகே’.. ‘கோயிலுக்குள் மர்மப்பொருள் வெடித்ததில் 2 இளைஞர்கள் பலி’.. ‘தீவிரவாத அச்சுறுத்தலோ’ என பரபரப்பு..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 25, 2019 08:33 PM

சென்னை அருகே கோயிலுக்குள் மர்மப்பொருள் வெடித்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 dead 4 injured in explosion at Kachipuram temple near chennai

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மானமதியில் உள்ள கங்கையம்மன் கோயிலில் இளைஞர்கள் சிலர் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது கோயிலின் மேல் தளத்தில் பை ஒன்று கிடப்பதைப் பார்த்த அவர்கள் அதை அப்புறப்படுத்த முயன்றுள்ளனர்.

அப்போது திடீரென அதிலிருந்த மர்மப்பொருள் வெடித்ததில் 5 இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர். செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களில் சூர்யா, திலீபன் ராகவன் என்ற 2 இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து கோயிலில் மர்மப்பொருளுடன் கூடிய பையை கொண்டுவந்து வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கோயிலில் மர்மப்பொருள் வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழந்ததுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KACHIPURAM #TEMPLE #BOMB #EXPLOTION