நாக்கை நீட்டி செல்பி.. 'கக்கா போன காக்கா'.. இளம்பெண்ணுக்கு மறக்க முடியாத சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: நாக்கை நீட்டி செல்பி எடுத்த பெண்ணின் வாயில் காக்கா கக்கா போன சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

செல்பி பிரியர்களை விதவிதமாக செல்பி எடுக்கிறார்கள். ஓடும் ரயில் முன்பு செல்பி, பறக்கும் விமானத்திற்கு பக்கத்தில் நின்று செல்பி, கரணம் தப்பினால் மரணம் என்று பள்ளத்தாக்கில் நின்று செல்பி, ஆழ்கடலில் செல்பி, சாலைகளில் வாகனத்தை ஓட்டிய படி செல்பி, ஆடு, கோழிகளை உள்ளே தள்ளியபடி ஓட்டலில் செல்பி என பலரும் பல விதங்களில் செல்பி எடுக்கிறார்கள்.
சில செல்பிக்கள் பார்த்தால் நமக்கே ஆசையை தூண்டும், இப்படி ஒரு போஸ் நாம் கொடுத்து எடுக்கவில்லையே என்று ஏங்குவோம். அந்த அளவிற்கு செல்பிக்களை தாறுமாறாக எடுக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். குறிப்பாக 2கே கிட்ஸ்களின் செல்பிகள் இணையத்தில் மிகவும் வைலாகும். அப்படி ஒரு 2கே கிட்ஸ் எடுத்த செல்பி இணையவாசிகளிடம் அடக்க முடியாத சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது. வடிவேலு சினிமா பாணியில் அந்த இளம் பெண்ணுக்கு காக்கா செய்த சேட்டையை அந்த பெண் என்றைக்கும் மறக்காது.
இளம் பெண் ஒருவர் நாக்கை நீட்டியபடி செல்பி எடுக்க போஸ் கொடுத்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாக நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்து கொண்டிருந்ததை அவரது நண்பர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த காக்கா, நடு வாயில் கக்கா போய்விட்டு சென்றது. என்னடா இது வானத்தில் இருந்து நாக்கில் என்ன விழுந்தது என்று பார்த்த பெண் காக்காவின் கக்கா என்பதை உணர்ந்து காரி துப்பி நொந்துபோய் செல்பியை முடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நாக்கை நீட்டி செல்பி எடுப்போரோ உஷாராக இருங்க.. அந்த காக்கா உங்களையும் தேடி வரலாம்.

மற்ற செய்திகள்
